17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று துவக்கம்!

டெல்லி, அக்., 6- 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

இந்த போட்டியை, இந்தியா நடத்த உள்ளது. முதல்நாள் போட்டியில், இந்திய அணி, வலிமையான அமெரிக்காவை எதிர்கொள்கிறது. டெல்லி நேரு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வர உள்ளனர்.

அத்துடன், பிரதமர் மோடி தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.