ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் மலேசியாவை வென்றது இந்தியா!

டாக்கா, அக்., 20- ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில், மலேசிய அணியை இந்திய அணி வென்றுள்ளது.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில், ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன்படி, முதல் சுற்று முடிவடைந்து, தற்போது 2வது சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

சூப்பர் 4 என்ற பெயரில் நடக்கும் இந்த 2வது சுற்றில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, மலேசியா ஆகிய 4 அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. இதில், நேற்று நடந்த போட்டியில், இந்தியா மலேசிய அணியை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள், மலேசியாவை கோல் மழையால் திணற செய்தனர். இதன்படி, 6-2 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

அடுத்து நடைபெற உள்ள போட்டியில், பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது.