ஆசிய ஹாக்கி கோப்பை: இந்திய அணி சாம்பியன்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ஆசிய ஹாக்கி கோப்பையை வென்று, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள டாக்கா நகரில், கடந்த சில நாட்களாக, ஆசிய ஹாக்கி கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா உள்ளிட்ட 8 அணிகள் விளையாடின.

முதல் சுற்றின் முடிவில், வங்கதேசம், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் போட்டியில் இருந்து வெளியேறின. 2வது சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் பங்கேற்றன.

ஆரம்பம் முதலே இந்த தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதன்படி, சிறப்பாக ஆடி, இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது. இறுதிப் போட்டியில் மலேசியாவை நேற்று எதிர்கொண்ட இந்திய அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதற்கு முன்னர், 2007ம் ஆண்டு ஆசிய ஹாக்கி கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.