இயக்குனராக விரும்புகிறார் விஜய்!

நடிகர் விஜய் விரைவிலேயே இயக்குனர் அவதாரம் எடுப்பார் என,தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் உள்ள விஜய், இதுவரை 61 படங்களில் நடித்துவிட்டார். அவர், தற்போது 62வது படமாக, முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளார்.

61வது படமான மெர்சல் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் விஜய் இயக்குனராக விரும்புவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இதனை சினிமா ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘’நடிகர் விஜய் அடிக்கடி சினிமா இயக்குவதே தனது கனவு எனக் கூறுவார். அவர் எப்போது வேண்டுமானாலும் சினிமா இயக்க வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகாலம் நடிகராகவே அவர் பயணித்த நிலையில், விரைவில் இயக்குனர் அவதாரம் எடுப்பது உறுதி,’’ என்றும் விஜய் மில்டன் குறிப்பிட்டுள்ளார்.