டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா ஏமாற்றம்

கொல்கத்தா, நவ.,16- இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி வீரர்கள், ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று போட்டி தொடங்கவிருந்த நிலையில், காலை முதலாகவே, கனமழை பெய்தது. இதனால், ஆட்டம் தொடங்குவதில் இடையூறு ஏற்பட்டது.

எனினும் பிற்பகலில் மழை நின்றதால், ஆட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, டாஸ் வென்ற இலங்கை அணி, இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது.

இதையடுத்து, இந்திய ஆணி ஆட தொடங்கியது. ஆனால், முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் ராகுல் டக் அவுட் ஆனார். இதையடுத்து, ஷிகார் தவண் 8 ரன்களிலும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 17 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து, இந்தியா தடுமாறிய நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக, முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

புஜாரே மற்றும் ரகானே களத்தில் உள்ளனர். 2ம் நாள் ஆட்டம் எப்படி இருக்கும் என, ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.