இந்தியன் சூப்பர் லீக்: சென்னை – கோவா இன்று மோதல்

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கோப்பை தொடரின் 4வது சீசன் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.

இதில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாள் போட்டியாக, இன்று மாலை சென்னை அணியும், கோவா அணியும் மோத உள்ளன.

சென்னையில் நடைபெறும் இந்த போட்டியில், உள்ளூர் அணி வெற்றிபெறுமா என, சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சென்னை கால்பந்து அணியில், தோனி உரிமையாளராக உள்ளார். அதேபோல, கோவா கால்பந்து அணியில் விராட் கோலி உரிமையாளராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.