தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் உலக சாதனை!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், டெஸ்ட் விளையாட்டுப் போட்டிகளில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அவர் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதன்மூலமாக, குறைவான டெஸ்ட் போட்டிகளிலேயே 300 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் நிகழ்த்தியுள்ளார். அவர் இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.