புயல் பாதித்த கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, டிச.,5, 6 ஆகிய 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவ்கான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒக்கி புயல் காரணமாக, மாவட்டம் முழுவதும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வ்ருகிறது. இதில் இருந்து மாணவர்களுக்கு சற்று ஓய்வு அளிக்கும் வகையில், கன்னியாகுமரி முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு, டிசம்பர் 5, 6 ஆகிய 2 நாட்களும் விடுமுறை விடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.