அதிவேக செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்

ரியாத்: சர்வதேச அளவிலான அதிவேக செஸ் போட்டியில், விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சர்வதேச அளவிலான அதிவேக செஸ் போட்டி நடைபெற்றது. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மொத்தம் நடைபெற்ற 15 சுற்றுகள் முடிவில் 6 வெற்றி மற்றும் 9 டிரா செய்த ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் ஆகியோர் சம புள்ளிகளை பெற்றனர்.

இதையடுத்து, டை பிரேக்கர் ஆட்டம் நடைபெற்றது. இதன் முடிவாக, விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். 2003ம் ஆண்டுக்குப் பின்னர் ஆனந்த் இந்த போட்டியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.