எனது தந்தைக்கு அதிக சமூக பொறுப்பு உள்ளது: ஸ்ருதிஹாசன் பேச்சு

சென்னை: ‘’எனது தந்தை கமல்ஹாசனுக்கு அதிக சமூக பொறுப்பு உள்ளது,’’ என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தற்போது கட்சி தொடங்கும பணிகளை மேற்கொண்டுள்ளார். இதுபற்றி அவரது மகள் ஸ்ருதிஹாசன் தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

எனது தந்தைக்கு ஆரம்பத்தில் இருந்தே சமூக அக்கறை உள்ளது. அவர் படங்களை பார்த்தாலே அது தெரியும். அவரது அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அவரது அரசியல் பயணத்திற்கு எனது ஆதரவு உண்டு.

இவ்வாறு ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.