“ஹோட்டல் இட்லியில் ஒளிந்திருக்கும் பயங்கரம் “- இட்லி பிரியர்களே உஷார் :!!!

சென்னை:சென்னையில் ஒரு உணவு விடுதி ஒன்றில் இட்லி சாப்பிடச் சென்றேன். சமையல் அறையில் இட்லி வேகவைப்பதை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.இட்லி வேகவைக்கும்தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவைஇட்டு வேகவைக்கும்காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த இட்லிகளை உணவுப் பரிசோதனைக்கு அனுபவித்தார் நண்பர் ஒருவர். புற்றுநோயைஉருவாக்கக் கூடியபாலித்தீன் துகள்கள் அந்த இட்லிகள் முழுவதும் பரவி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

கடைக்காரரிடம் இதைச்சொல்லி தயவுசெய்து துணியைவிரித்து அதன்மேல் இட்லி வேகவைப்பதை செய்யுங்கள் என்று சொன்னோம்.

அதற்கு அவர் பதில்கூறினார்.தமிழ்நாடு முழுவதும் உள்ளபெரும்பாலான ஹோட்டல்களில்பாலித்தீன்பேப்பர்களின் மீதுதான் இட்லிகள்வேகவைக்கப்படுகின்றன.
இதுதான் எளிதாகவும் சவுகரியமாகவும் உள்ளது. துணிகளைப்பயன்படுத்தினால் இட்லிகளைப்பிரிப்பது சிரமமாக உள்ளது. வேளைப்பளுவும் கூடுகிறது.

கேன்சர் இட்லிகள் விற்பனையை எப்படித்தடுப்பது என யோசிக்கிறீர்களா?

முதலில் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பரவலாக்குவோம்.