ஃபேஸ்புக் 86.5 கோடி பதிவுகளை நீக்கியது

58.3 கோடி போலியான கணக்குகள் நீக்கப்பட்டதாகவும், தற்போது பயன்பாட்டிலுள்ள கணக்குகளில் 3 முதல் 4 சதவீதம் வரை போலியானது என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் பதிவிடப்பட்டுள்ள செய்திகள், அவற்றின் தரம், எண்ணிக்கை தொடர்பாக முதன்முறையாக அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில், வன்முறை தொடர்பான பதிவுகளுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இந்த அறிக்கை 86 பக்கங்களைக் கொண்டதாகும். இதுதொடர்பாக, ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை பிரிவின் துணை தலைவர் கய் ரோஸன் தெரிவித்தபோது,  கடந்த 18 மாதங்களாக ஃபேஸ்புக் தளத்தில் உள்ள தேவையற்ற பதிவுகளை நீக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றதாகவும், இனி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேவையற்ற பதிவுகளை நீக்குவது தொடர்பான அறிக்கைகளை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.