பொள்ளாச்சி அருகில் பள்ளிக்கட்டிடம் இடிந்து விபத்தில் இருவர் பலியானார் .!!!

கோவை:பொள்ளாச்சி அருகில் தனியார் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பொள்ளாச்சி அருகில் தனியார் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

பொள்ளாச்சி அருகிலுள்ள ஜமீன்முத்தூர் பகுதியில் தனியார் பள்ளிக் கட்டிடம் ஒன்று தற்போது கட்டப்பட்டு வருகிறது. வழக்கம் போல் கட்டுமான வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், பெரும்பாலானோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று பிறபகல் 2 மணியளவில் பள்ளியின் கட்டிடம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒரிசாவைச் சேர்ந்த கண்ணன் (18) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 14க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மீட்கப்பட்டவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.