தமிழ்ப்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்ப்படம் வெளியானது. இப்படத்தில் தமிழில் வெளியான பல்வேறு படங்களை கிண்டல் நகைச்சுவையாக விமர்சித்து படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. சிவா நாயகனாக நடித்த இப்படத்தில் பரவை முனியம்மா, வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து 8 வருடங்கள் கழித்து இதன் 2 -ம் பாகம் உருவாகியுள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் சார்பில் சசிகாந்த் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திலும் சிவா கதாநாயகனாக நடித்த திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திலும் தமிழில் வெளியான முன்னணி நாயகர்களின் படத்தை விமர்சித்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு முதலில் ‘தமிழ்ப்படம் 2.0’ என்று படக்குழுவினர் தலைப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் படத்தின் தலைப்பை ‘தமிழ்ப்படம் 2’ என திடீரென படக்குழுவினர் மாற்றியுள்ளனர். இதற்கான அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.