இறுதி சுற்றிற்கு முன்னேறினார் பி.வி சிந்து .

சீனாவில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நான்ஜிங்கில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 2 வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியை, உலகின் நம்பர் 3 வீராங்கனையான இந்தியாவின் பிவி சிந்து மோதினார்.

இதில் 21-16, 24-22 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, பிவி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் தொடர்ந்து 2வது முறையாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜப்பானின் நொஸொமி ஓகுஹராவிடம், பிவி சிந்து தோல்வி அடைந்தார்.

ஆனால் நடப்பு தொடரில் அவரை காலிறுதியில் வெளியேற்றினார். நாளை நடைபெறவுள்ள பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினுடன் பிவிசிந்து மோதுகிறார்.