கேரளாவில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்:

பாலக்காடு: கேரளாவில் கடந்த 15 நாட்களாக பெரும் மழை பெய்து வருவதால் கேரளா மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி நிலைகுலைந்து போனது . இந்தியா-வின் அனைத்து மாநில அரசிடம் இருந்தும் , தனி நபர்க்கிலிடம் இருந்தும் பண உதவி மற்றும் ஏனைய உதவிகள் பெறப்பட்டு வருகிறது.

அதை தொடர்ந்து இன்று கேரளாவை பார்வையிட்ட மோடி அவர்கள் ரூபாய்:500. கோடி வெள்ள நிவாரண நிதியாக அறிவித்தார் , மேலும் பல உதவிகள் செய்வதாகும் கூறினார் .

இம்மழை வெள்ளம் காரணமாக கடத்த 4 நாட்கள் போக்குவரத்துக்கு பெரிதும் பாதிக்க பட்டிருந்தது .கேரள மாநிலம் திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து நான்கு நாட்களுக்கு பின் மீண்டும் துவங்கி உள்ளது. நான்கு நாட்களுக்கு பின் பாலக்காடு-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துவங்கி உள்ளது.