குட்கா சோதனை – முதல்வருடன் டி-ஜி-பி சந்திப்பு :!

சென்னை : சென்னை , பெங்களூரு நகரத்தில் சுமார் 35 இடத்தில் குட்கா ரைடு நடைபெற்றது , இச்சோதனை சி.பி.ஐ அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. இது உயர் நீதிமன்ற உத்திரவுங்கினங்க நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் குட்கா ஊழல் தொடர்பாக இன்று சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. இதுகுறித்த விஜயபாஸ்கர் அறிக்கையில், `குட்கா, பான்மசாலா விற்பனை கடந்த 2013-ம் ஆண்டே தடை செய்யப்பட்டுவிட்டது. என் மீது வைக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சந்தித்து பேசினார். குட்கா ஊழல் தொடர்பாக. இன்று காலை முதல் நடைபெற்ற சி.பி.ஐ சோதனையைத்தொடர்ந்து, இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.