யூடியூப்-ல் வெளியானது விஜய் – முருகதாஸ் கூட்டணி படம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். நீல்நிதின் முகேஷ் வில்லனாகவும், சதீஷ் காமெடியனாகவும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் கதிரேசன், ஜீவானந்தம் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.

விவசாயத்தையும், விவசாயிகளின் வலியையும் எடுத்துரைக்கும் விதமாக உருவான இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இதுவே லைகா நிறுவனத்திற்கு முதல் படம். கத்தி வெளியாகி 4 ஆண்டுகளாகியுள்ள நிலையில் முழு படத்தையும் யூடியூபில் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. எந்தவிதமான கட்டணமும் இன்றி இந்தப் படத்தை யூடியூபில் பார்த்து ரசிக்கலாம்.