ரயில் கொள்ளையர்களின் வாக்குமூலம்:!

ரயிலில் மேற்கூரையில் ஓட்டை போட்டு கொள்ளை அடித்தவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம்அளித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னைசென்றுகொண்டிருந்த ரயிலின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 5.78 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தனர். இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகள் தேடலுக்குப் பின் 7 பேரை மத்திய பிரதேசத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களில் 5 பேரை மட்டும் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில், கொள்ளையடித்த பணத்தை மத்திய அரசின் பணமதிப்பு நீக்க உத்தரவு வருவதற்கு முன்பே பங்கு பிரித்துச் செலவழித்துவிட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், பணத்தை தங்கம் அல்லது வேறு பொட்களாக மாற்றி பதுக்கியிருக்கலம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.